சிக்கிய வலுவான ஆதாரங்கள்.. கடும் நெருக்கடியில் செந்தில் பாலாஜி..!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனைக்கு பின் 60 நில ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அதில் செந்தில் பாலாஜி நெருங்கிய கூட்டாளியும் திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளருமான சாமிநாதன் வீடு அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமலாக்க துறையினர் கடந்த 3ஆம் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர்.
அதில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வருமான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





