கர்நாடகாவில் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்க மறுத்த வட மாநில பெண்.. நடத்துனருடன் வாக்குவாதம்..!
கட்டணம் இன்றி பயணிக்க தன்னையும் அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அரசு பேருந்தில் வட மாநில பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த திட்டத்தில் பயன்பட பெண்கள் கர்நாடகாவை சேர்ந்தவராகவோ அல்லது அங்க வசிக்கும் முகவரி ஆதாரத்தை கொண்டவராகவோ இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதை நிரூபிக்க அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாநில பெண் ஒருவர் பெங்களூருவில் அரசு பேருந்தில் ஏறினார். நடத்துனர் பயணச்சீட்டு வாங்க கூறியதால் அவரிடம் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தான் மத்திய அரசு ஊழியர் என்றும் பெங்களூருவில் தங்கி இருப்பதாக கூறி இதற்கான ஆதாரத்தை அந்த பெண் காட்டினார். எனினும் நடத்துனர் இதை ஏற்கவில்லை. இந்த வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





