முதலமைச்சருக்கு கடிதம் போட்ட பள்ளி சிறுமி.. அதிரடி உத்தரவு..!
அம்பாசமுத்திரம் அருகே பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமியை வைத்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகி கிடந்த நிலையில் புதிய கட்டிடம் கோரி அந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷா என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் பரிந்துரைப்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு 30 லட்சம் ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இன்று கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் கோரிக்கை வைத்த சிறுமியை கௌரவம் செய்யும் விதமாக அவரது கைகளாலேயே அடிக்கல் நாட்டப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





