ஆதார், அடையாள வாக்காளர் அட்டை இணைப்பு கட்டாயம் அல்ல : மத்திய அரசு
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் அர்ஜுன் ராமேஸ்வால் பழைய வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஒருவர் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்பட்டு இருப்பதாகவும், நிதி உதவி மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாகவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





