காணாமல் போன சிறுவன்.. நீர்த்தேக்க தொட்டியில் கிடந்த சடலம்..!
தர்மபுரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன ஆறு வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டான். காட்டம்பட்டியை சேர்ந்த ஆதி மூலம் – சுதா தம்பதியினருக்கு மதியரசு உள்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
கடந்த 16ஆம் தேதி முதல் மத்திய அரசு காணாமல் போனதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்பொழுது அவர் மதியரசை கொலை செய்து அருகே இருந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டையில் போட்டதாக கூறப்படுகிறது. சிறுவன் உடலை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிரகாஷை கைது செய்த போலீசார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





