--- --:--:-- --

திடீரென இடிந்து விழுந்த பாலம் ..நொடிப்பொழுதில் தப்பிய பேருந்து..!

4

ஒடிசா மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சென்னை – கொல்கத்தா இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜார்ஜ் போர் மாவட்டத்திலுள்ள ரசூல் பூர் என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

 

அப்போது பாலசோரில் இருந்து புவனேஸ்வர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து சென்று சில நொடிகளில் பாலம் இடிந்து விழுந்ததால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிர்த்தப்பினர்.

 

இந்த சம்பவத்தால் கொல்கத்தா – சென்னை நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon