ஐஎஃப்எஸ் நிதி நிறுவன மோசடி.. சிக்கிய உறவினர்.. தட்டித் தூக்கிய ஐந்து பேர்..!
வேலூரை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிய ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி செய்த உறவினரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ராஜேஷ் என்பவர் ஏராளமானவரிடம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு பணத்தை பெற்று மோசடி செய்து தலைமுறைவானதாக கூறப்படுகிறது. அவரது நண்பர்களான கோபி மற்றும் முருகனாகியோர் தங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தெரிந்து கொண்ட கோபி முருகன் மற்றும் நண்பர்கள் புது சத்திரத்தில் காரில் சென்ற ராஜேஷை மடக்கி காருடன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தல்காரர்கள் ஐந்து பேரையும் பிடித்து கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





