--- --:--:-- --

நடப்பாண்டிலேயே அமலுக்கு வரவிருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு..!

2

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் பத்து விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார்.

 

புதுச்சேரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே மருத்துவ படிப்புகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரை செய்துள்ளார்.

 

இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் 7.5% உள்ள இடம் ஒதுக்கீட்டை தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதே போல் புதுச்சேரி மாநிலத்திலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு புதுச்சேரியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon