--- --:--:-- --

தொலைக்காட்சி மூலம் குழந்தையை காண்பிக்கும் நடைமுறை..!

8

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களுக்கு தொலைக்காட்சி மூலம் குழந்தையை காண்பிக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றது.

 

டிவியும் அதன் அருகில் ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளன . கர்ப்பிணியை பிரசவ அறைக்கு அழைத்து செல்வது முதல் குழந்தை பிறந்தவுடன் அது ஆணா பெண்ணா என்றும் எத்தனை கிலோ எடையுடன் பிறந்துள்ளது என்றும் ஒலிபெருக்கி மூலம் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால் ஒரே நேரத்தில் உறவினர்களுக்கு உடனடியாக தாயும் சேயும் நலம் என்ற தகவல் கிடைத்து விடுகிறது. பின்னர் குழந்தையை உறுப்பினர் ஒருவரின் கையில் கொடுத்து கேமரா முன்பு அமர வைக்கின்றனர். அதனை வெளியில் உள்ள திரையில் பார்த்து உறவினர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon