மயானத்தில் தொங்கிய இளைஞர் உடல்.. மொத்த கிராமமும் அதிர்ச்சி..!
கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் சடலமாக தொங்கியபடி கிடந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னசேலம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த 21ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார்.
இது தொடர்பாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் போலீசார் வழக்கை பதிவு செய்து விக்னேஷை தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் கிராமத்தில் சுடுகாடு பகுதியில் தொங்கிய நிலையில் விக்னேஷ் சடலமாக கடந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





