தொழில்நுட்பக் கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்..!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வழக்கமான பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி விபத்தை தவிர்க்கும் வகையில் துரிதமாக செயல்பட்டு கிராமத்தில் தரை இறக்கினார். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





