மூட்டு வலிக்கு ஊசி போட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மூட்டு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழந்தான். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நரேஷ் என்ற 12 வயது சிறுவனுக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அங்கிருந்து உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் தாய் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





