பெண்களுக்கு மாதம் ரூ.1,500..தேர்தல் வாக்குறுதி கொடுத்த சந்திரபாபு..!
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் அரசாக பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் தான் போட்டியிடும் கடைசி தேர்தல் எனவும் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபுவின் அரசியல் வாரிசாக வருவார் என கருதப்படும் அவரது மகன் தற்போது மாநிலம் முழுவதும் மக்களை சந்தித்தும் பாதயாத்திரை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





