கர்நாடகா: நாளை புதிய அரசு பதவி ஏற்பு – தமிழக முதல்வர் பங்கேற்பு
கர்நாடகாவில் புதிய அரசு பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சர் ஆக சிவக்குமாறும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளதால் பாரதிய ஜனதாவை தவிர பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களது அழைப்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்றிரவு பெங்களூருக்கு புறப்பட உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





