--- --:--:-- --

இறுதி கட்டப் பணிகளை நெருங்கும் நாடாளுமன்ற புதிய கட்டிடம்.. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!

2

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

 

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை அரங்கில் 788 பேர் அமர முடியும். மாநிலங்களவை அறையில் 300 பேர் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்கள் நடைபெறும் பொழுது 1280 பேர் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon