--- --:--:-- --

சாராய வியாபாரிகளுக்கும் எத்தனால் விநியோகித்த 2 பேர் கைது..!

4

மரக்காணம் விஷ சாராயம் உயிரிழப்பு வழக்கில் சாராய வியாபாரிகளுக்கு எத்தனால் வினியோகம் செய்த இரண்டு பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் அருந்திய 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இதில் சிகிச்சை பலனின்றி 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதைப்போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்தனர். 22 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சாராய வியாபாரிகள் 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

வியாபாரிகளுக்கு எத்தனால் என்ற வேதிப்பொருளை விநியோகம் செய்து வந்த ஏழுமலை உள்ளிட்ட இரண்டு பேர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon