இன்று வெளியாகும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றது. 7,73,287 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதினார்.
இதே போல் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி துவங்கி ஏப்ரல் இருபதாம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





