--- --:--:-- --

பெண்ணின் கால்களில் ஏறி இறங்கிய பேருந்து..!

7

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் பெண் ஒருவர் ஏற முயன்றதை கவனிக்காமல் பேருந்தை நகர்த்தியதால் பெண் கீழே விழுந்த இரண்டு கால்களும் சேதம் அடைந்த நிலையில் ஓட்டுநரை பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

நிர்மலா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்தில் ஏற முயன்ற பொழுது பேருந்து ஓட்டுனர் நிர்மலாவை கவனிக்காமல் முன்னாள் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்தி சொல்லும் நோக்கில் இயக்கியுள்ளார்.

 

இதனால் முன்பக்க படிக்கட்டில் தவறி விழுந்தார். இரண்டு கால்களிலும் பேருந்து பின் பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon