மாட்டு வண்டி மீது மோதி தூக்கி வீசப்பட்ட கார்..!
தென்காசி அருகே மாட்டு வண்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி ராஜபாளையம் செல்லும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது முன்னே சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மாட்டு வண்டி மற்றும் கார் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் பின்னே வந்த காரின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





