சிறுநீரக செயலிழப்பால் அவதி.. உணவு கோரி ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுநீரகம் செயலிழந்த நிலையில் வறுமை நிலையில் தவிப்பதால் சிகிச்சை உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தாமோதரன் என்பவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு வயதில் குழந்தையும் இருக்கும் நிலையில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் இதனால் முறையான சிகிச்சை கூட பெற முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





