அமெரிக்கா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை..!
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அதிபர் ஜோபைடன் அழைப்பை ஏற்று ஜூன் மாதம் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு முறையிலிருந்து வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மோடியின் பயணம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் ஒன்றாக இணைக்கும் குடும்பமாகவும் நட்பின் பிணைப்புகளை உறுதிப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்று நம்புவதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் பயணத்தின் பொழுது பாதுகாப்பு எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பரஸ்பரம் கலந்து கொள்ள உதவும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





