கோவையில் இடி, மின்னலுடன் பலத்த மழை.. முறிந்து விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு..!
கோவையில் திடீரென இடியுடன் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
காந்திபுரம், சிங்காநல்லூர், போத்தனூர் உள்ளிட்ட கோவை நகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் உள்ளது.
இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்டைய சாலை பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற கார் சேதமடைந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





