--- --:--:-- --

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

3

மின்வாரிய ஊழியர்களுக்கு ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வது தொடர்பான பேச்சுவார்த்தை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

 

19 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற இந்த பேச்சு வார்த்தையில் ஆறு விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஊதிய உயர்வின் மூலம் 75 ஆயிரத்து 978 பேர் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்.

 

இரண்டு தவணைகளாக நிலுவை தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon