--- --:--:-- --

ஆன்லைன் உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சா விற்பனை..!

4

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஆன்லைன் உணவு வினியோகம் செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பத்மநாபன் என்ற இளைஞர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 

உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக புகார் இருந்தது. அதன் பேரில் அவரது உடைமைகளை காவல்துறையினர் சோதனை செய்த பொழுது உணவுகளுக்கு மத்தியில் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றது அம்பலமானது.

 

சுமார் பத்து பொட்டலங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது அம்பலமானது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon