கல்லூரி மாணவியை காரில் கடத்திய இளைஞர்.. திருவாரூரில் பரபரப்பு..!
திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த மாணவியை இளைஞர் காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து முத்துப்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது காரில் வந்த இளைஞர் ஒருவர் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் மாணவியை போலீசார் தேடி வந்தனர். இதை அறிந்து இளைஞர் அந்த மாணவியை இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மாணவியை மீட்ட போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். ஒருதலை காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் கடத்தியது தெரிய வர அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





