--- --:--:-- --

பைக்கில் இருந்து தவறி விழுந்த மனைவி..பேருந்து தலை மீது ஏறி கொடூரம்..!

4

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி குமாரி. இவர் வாலாஜாபாத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றினார்.

 

தினமும் பணி முடிந்து வரும் மனைவியை செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வருவது வாடிக்கை. நேற்று அப்படி மனைவியை அழைத்து வருகையில் சாலையில் வாகனம் தடுமாறி சாய்ந்துள்ளது.

 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த குமாரி அரசு பேருந்தில் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். பேருந்து தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தன் எதிரே மனைவி துடி துடித்து இறந்ததை கண்டு சேகர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon