திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்..!
பீகார் மாநிலத்தில் திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதிய பயங்கர விபத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரினத்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த பொழுது கோர சம்பவம் நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும் போலீஸ் கிஷான் குமாரி கூறினார்.
மேலும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவ இடத்திலிருந்த லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





