--- --:--:-- --

குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்..!

3

காரைக்கால் அருகே குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து திருநள்ளாறு அருகே செல்லும்போது மாற்று பாதையில் செல்லுங்கள் என எச்சரிக்கை பலகைகளை பொருட்படுத்தாமல் சென்றுள்ளது.

 

இதனால் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர். குடிபோதையில் இருந்த ஓட்டுனரை பிடித்த பொதுமக்கள் திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கும்பகோணம் செல்கிற அரசு பேருந்தில் பயணிகளை ஓட்டுனர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon