--- --:--:-- --

இயக்குனரின் காதலிக்கு ஆபாச மிரட்டல் விடுத்த மர்ம நபர்..!

4

சென்னையை சேர்ந்த சினிமா இயக்குனரின் காதலிக்கு செல்போன் மூலமாக தொந்தரவு அளித்த திருச்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

புது முக இயக்குனர் ஆகவும் சினிமா பயிற்சி மையம் ஒன்றையும் நடத்திவரும் ராம்குமார் என்பவர் தனது காதலியுடன் வசித்து வரும் நிலையில் தனது காதலிக்கு ஏற்கனவே அறிமுகமான திருச்சியை சேர்ந்த ஜெயராம் பாண்டியன் என்பவர் பழைய புகைப்படங்களை சித்தரித்து whatsappபில் அனுப்பி தொந்தரவு தருவதாகவும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய வளசரவாக்கம் போலிசார் வழக்கு பதிவு செய்து திருச்சியில் வைத்து அந்த நபரை கைது செய்தனர்.

 

அவரது செல்போனில் சினிமா இயக்குனரின் காதல் குறித்த சித்தரித்த படங்கள், ஆபாச மிரட்டல் பதிவுகள் மட்டும் இன்றி மேலும் சில பெண்களை இதே பாணியில் மிரட்டி பணம் கேட்டு வந்தது தெரிய வந்திருப்பதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon