ஆகஸ்ட் 1 முதல் 15 வரை நாடு தழுவிய போராட்டம்..!
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என கிஷான் மோட்சா அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற அந்த அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நாடு தழுவிய அளவில் விவசாய யாத்திரைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் நினைவாக அனைத்து மாநில தலைநகரங்களிலும் மூன்று நாட்கள் தொடர் தர்ணாவில் ஈடுபடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





