--- --:--:-- --

பிறந்த நாளே இறந்த நாளாக மாறிய பரிதாபம்..!

5

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தின் கீழே ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகையை பொருட்படுத்தாமல் மது அருந்திய கல்லூரி மாணவர் 19வது பிறந்தநாள் அன்று உயிரிழந்தார்.

 

கல்லூரி மாணவரான மோகன் பிறந்த நாளை ஒட்டி நண்பர்களுக்கு இருங்குன்றம் பார்ம் ஹவுஸ் அருகே மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. சுற்றி அனைத்து இடங்களும் காய்ந்து கிடந்தாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது.

 

அதில் இறங்கி குளித்த பலரும் ஏற்கனவே இறந்துவிட்டதால் ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மோகன்ராஜ் நீச்சல் தெரியாத போதிலும் மது போதை தலைக்கேறி தண்ணீரில் இறங்கியதாக தெரிகிறது.

 

சற்று நேரத்தில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரது நண்பர்களின் அலறல் சப்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த சிலர் மூச்சு பேச்சு இல்லாத மோகனை நீரிலிருந்து வெளியே எடுத்தனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon