நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற தந்தை, மகள் தவறி விழுந்து உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற சென்னையை சேர்ந்த தந்தை, மகள் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். சென்னை மந்தைவெளியில் வசித்த பாலமுரளி ஐடி கம்பெனியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர்.
பாலமுரளி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று நல்லூர் நீர்வீழ்ச்சியில் நீராடியுள்ளார். ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து தந்தை, மகள் பலியாகி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





