தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார்..!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர் தனது மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தலைமை காவலர் ஒருவர் தலைமை செயலகத்தின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டார். ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் கோதண்டபாணி தலைமை செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால் அவரை பார்க்க அனுமதி மறுத்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் தனது பத்து வயது மகள் கதீஜாவுக்கு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் வலது கால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





