தமிழ் புத்தாண்டு : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
தமிழ் புத்தாண்டை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் நல்லதே நடக்க நானிலம் சிறக்க மகிழ்ச்சி பொங்க மனிதநேயம் சிறக்க தமிழ் புத்தாண்டு வரவேற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்து செய்தியில் இந்த புத்தாண்டு தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும் நிறைவான மகிழ்ச்சியையும் புதிய எழுச்சியையும் அளிக்கும் ஆண்டாக விளங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த சோபக்கிருத தமிழ் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்துள்ளதாக வாழ்த்து செய்தி குறிப்பிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து செய்திகள் புதிய தமிழ் புத்தாண்டு வெற்றிகள் குவிக்கும் ஆண்டாக நன்மைகள் பிறக்கும் ஆண்டாக ஒளி பிறக்கும் ஆண்டாக அமைய வாழ்த்து உள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சித்திரை திருநாள் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி நலம் வளத்தை வழங்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுக்க பரவி வாழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் மகிழ்வான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வாழ்க்கையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வாழ்த்து செய்தி தமிழர்களின் வாழ்வில் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





