வாலிபரின் கழுத்தை வெட்டிய மாஞ்சா நூல்..!
மதுரவாயலில் தடை செய்யப்பட்ட காற்றாடி பறக்க விட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுரவாயில் பைபாஸில் இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு வந்தார்.
இதனை அடுத்து மதுரவாயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட காற்றாடி பறக்க விடப்படுவதாக போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது தடை செய்யப்பட்ட காற்றாடியை பறக்கவிட்ட துறை மாணிக்கம், பாலாஜி, கணேசன் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





