--- --:--:-- --

காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை..வீட்டின் படுக்கை அறையில் இருந்து சடலமாக மீட்பு..!

Remains of person

Remains of person

கேரளாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட பள்ளி ஆசிரியை வீட்டின் படுக்கை அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த தம்பதி விஜிஸ் மற்றும் அனுமு நர்சரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து வந்து அனுமு எங்கு சென்றார் என தெரியவில்லை என்று அவரது கணவர் விஜய், பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

அனுமனின் செல்போனில் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை விஜிஸ் திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 

இதனையடுத்து அவரது பெற்றோர் கணவர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது படுக்கையறையில் போர்வையில் சுற்றப்பட்டு அவர் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு தலைமறைவாக இருக்கும் விஜயை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon