--- --:--:-- --

அண்ணனுக்கு கடன் வாங்கி கொடுத்த தங்கை.. திடீரென விஷம் குடித்த தங்கையின் கணவர்..!

9

தர்மபுரி மாவட்டத்தில் அண்ணனுக்கு தங்கை கடன் வாங்கி கொடுத்த நிலையில் கடனை அண்ணன் சரியாக கட்டாததாலும் கடன் கொடுத்தவர்களின் தொல்லையாலும் தங்கையின் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

வெள்ளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 4,75,000 பணத்தை தனது தங்கை புஷ்பா மூலம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கடனை முறையாக கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

 

இதனால் பலமுறை ரவிச்சந்திரனிடம் கொடுத்த பணத்தை கேட்டும் அவர் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கையின் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் பணத்தை திருப்பி செலுத்த கூறி வற்புறுத்திய தாயே ரவிச்சந்திரனை தரக்குறைவாக பேசிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்களின் தங்கையால் புஷ்பாவின் கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon