--- --:--:-- --

வால்பாறை சாலையில் சாய்ந்து நின்ற பேருந்து..!

7

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சாலையில் அரசு பேருந்து ஒன்று சாய்ந்து நின்றது. வால்பாறையில் இருந்து எஸ்டேட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

 

இதையடுத்து எஸ்டேட் பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு வழி விடும்பொழுது சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கியது.

 

புதிய சாலை அமைக்கும் பொழுது பழைய சாலையை தோண்டாமல் அதே சாலைக்கு தார் சாலை அமைத்ததாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon