சிகிச்சைக்கு வந்த இளைஞர்..மயக்க ஊசி செலுத்தும் முன் அதிர்ச்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்தனர். வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தைராய்டு பிரச்சனையால் மயக்க மருந்து ஏற்றுக்கொள்ளவில்லை என தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சுமார் 45 நிமிடம் மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற போராடினோம் என தனியார் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
மயக்க ஊசி போட துவங்கும் முன்பே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக டாக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





