--- --:--:-- --

அரசு பேருந்துக்குள் புகும் மழை நீர்..!

4

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மேற்கூரை வழியாக மழைநீர் புகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து ஏராளமான அரசு பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இதில் பல பேருந்துகள் சேதமடைந்திருப்பதால் அதில் பயணிக்கவே பொதுமக்கள் அரசு பேருந்து ஒன்று கூரையில் உள்ள துளை வழியாக நீர் உட் புகுந்து பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

பயணிகள் உடைமைகள் எடுத்து கொண்டே நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon