பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பதாக பேட்டியளித்த ராகுல்..!
இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் பொழுது பாலியல் தொல்லை தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்ரீ நகரில் இந்திய ஒற்றுமை பயணம் நடைபெற்ற பொழுது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பல்வேறு பெண்கள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்திருப்பதாக கூறினார் என சுட்டிக்காட்டி பேசினார்.
இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை முன்னெடுத்துள்ள டெல்லி காவல்துறை பெண்கள் சந்தித்த பிரச்சனைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ள காங்கிரஸ் கட்சி சட்டப்படி நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கப்படும் என கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





