நடிகர் ராதாரவி தலைமையில் செயல்படும் டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல்..!
சென்னை சாலிகிராமத்தில் கட்டப்பட்டுள்ள டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் விசாரணை நடைபெற்றது.
தகுந்த ஆதாரங்களை ராதாரவி தரப்பினர் சமர்ப்பிக்க தவறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடம்பாக்கம் அதிகாரி தலைமையில் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





