2 இதயம், 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!
ராஜஸ்தானில் 2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை பிறந்து 20 நிமிடங்களில் உயிரிழந்தது. ராஜஸ்தான் மாநிலம் பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த பெண்ணுக்கு சில மணி நேரத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறந்து 20 நிமிடங்கள் மட்டுமே குழந்தை உயிருடன் இருந்தது என்றும் அந்த பெண் குழந்தை இறந்தது.
அந்தப் பெண் குழந்தை இரண்டு இதயம், நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் பிரசவம் பார்க்கப்பட்டதால் கர்ப்பிணி உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





