--- --:--:-- --

ஓடும் ரயிலில் திடீர்வாக்குவாதம்.. கீழே தள்ளிக் கொன்ற அதிர்ச்சி..!

8

கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கொலையாளி கைது செய்யப்பட்டார்.

 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றினர்.

 

விசாரணையில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் மோதல் முற்றியதில் சக பயணியை மற்றொரு நபர் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon