உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி.. பள்ளி தான் காரணமா..?
சென்னை மதுரவாயலில் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனலட்சுமி நகரை சேர்ந்த வினோத்குமார் என்பவரது மகள் மோனிகா. அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயில் போலீசார் மோனிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்த நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





