--- --:--:-- --

மேக்கப்பால் முகம் வீங்கி கொடூரமாக மாறிய மணப்பெண் முகம்..திருமணம் நின்றதால் அதிர்ச்சி..!

9

கர்நாடகாவில் திருமணத்திற்கு வித்தியாசமாக மேக்கப் போட ஆசைப்பட்ட பெண்ணின் முகம் வீங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளான். கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிக்கரா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் கடந்த வாரம் அழகு நிலையத்திற்கு மேக்கப் போட சென்றுள்ளார். வித்தியாசமாக மேக்கப் போட வேண்டும் என்று எண்ணிய மணமகள் புதிய யுக்தியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளார்.

 

இதையடுத்து அழகு நில உரிமையாளர் தன் புதிய வகையான மேக்கப் முறையை கற்றுக் கொண்டதாக கூறி அவரை மணமகளுக்கு போட்டுள்ளார். மணப்பெண் முகத்தில் புதிய வகை கிரீமை தடவி நீர் ஆவியில் ஸ்டீம் செய்துள்ளார். இதனால் மணப்பெண்ணின் முகத்தில் தீக்காயங்களும் தழும்புகளும் ஏற்பட்டு முகம் முழுவதும் வீங்கி கருப்பு நிறமாக மாறியுள்ளது.

 

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு மணப்பெண்ணின் முகம் மாறியதால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளான். மணப்பெண்ணின் முகாம் பாதிக்கப்பட்டதற்கு காரணமான அழகு நிலைய உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon