--- --:--:-- --

கொரோனா பயத்தால் 3 ஆண்டுகளாக வீட்டை பூட்டிக் கொண்டு முடங்கி கிடந்த தாய், மகன்..!

4

ஹரியானா மாநிலம் குருகுராமில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர்.

 

தம்பதியினர் தனது மகனுடன் வசித்து வந்தனர். கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்த தன் கணவனை மனைவி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே பக்கத்து வீட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

 

தனது மகனுடன் தங்கியவர் வீடியோ கால் மூலமாக மட்டுமே கணவருடன் தொடர்பு கொண்டிருந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon