டிக்கெட் கவுண்டரில் தமிழ் மக்களை திட்டும் வடமாநில ஊழியர்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத், கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள டிக்கெட் கவுண்டர்களில் மூன்று கவுண்டர்களில் மட்டுமே ஊழியர்கள் உள்ளனர்.
அவர்களில் இருவர் வடமாநிலத்தவர்களாக உள்ளனர். இதனால் பயணிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக டிக்கெட் முன்பதிவு குறித்த சந்தேகங்களுக்கு வட மாநில ஊழியர்களால் சரியான பதில் கூற முடியாததால் தினமும் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





