அம்மாவின் மருத்துவ செலவிற்காக திருடனாக மாறிய இளைஞர்..!

சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

 

தேவி என்பவரின் வீட்டுக்கு கடந்த 19 ஆம் தேதி வீடு கேட்பது போல் சென்ற இரு நபர்கள் அவரை அறைக்குள் தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக்கொண்டு காலில் விழுந்து பண தேவைக்காக கொள்ளையடித்ததாக கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி உள்ளனர்.

 

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கோயம்புத்தூரை சேர்ந்த அஜித் மற்றும் பிரபு ஆகிய இருவரை கைது செய்தனர். அம்மாவின் மருத்துவ செலவிற்காகவும் பண தேவைக்காகவும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த இருவரும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.