துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்..மூன்று நாட்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்..!

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்கள் முன் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் நான்காயத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் டச் ஆராய்ச்சியாளரான பிராங்கிளின் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் துருக்கி, சிரியா, லெபனான் பகுதிகளை குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்து கூறியிருந்தார்.